உலகில் கொரனா பரவிய போது இந்தியர்கள் தங்களுக்கு பரவாது என சவால் விட்டனர். இப்போது எதுவித ஆயத்தமும் இல்லாமல் கொரனா வீரியமாய் செயற்படுகிறது. 10ம் திகதி 26 மரணங்கள் 11ம் திகதி 23 மரணங்கள் கொரனாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது அறிந்தும் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் எவ்வித முன்னாயத்தங்களும் ஏற்படுத்தாமல் அரசியல் வாதிகள் சிரித்து மழுப்பி வருகின்றனர். முன்னாயத்தமில்லாத நிலையில் இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர் பிராந்தியங்களில் கொரனாவை பரப்பும் முயற்சிகளை தனியார் மற்றும் நிறுவனங்கள் செய்து வரத்தான் செய்கின்றன. இன்னும் அறிவு ஏறாத அரசியல்வாதிகள் இருக்கும் வரை ஒன்றுமில்லை எனக் கூறும் வரை தமிழர் பகுதிகள் அறிவில்லாமையை காட்டும் பகுதிகளாகத்தான் இருக்கும். உடன் முன்னாயத்தங்கள் செய்து நாளை ஒரு அனா்த்தம் ஏற்பட்டு விடாதிருக்க இப்போதே ஆயத்தங்கள் செய்து நிலைமையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அந்தந்தப் பிரதேச நிறுவனங்களின் செயற்பாட்டினை மட்டுப்படுத்த வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையல்லவா ?